நாடார்களின் தோற்றம் குறித்த தொன்மக்கதை, தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் பிறந்த ஏழு குழந்தைகளைப் பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களிலிருந்தே நாடார் சமூகம் தோன்றியதாகவும் சொல்கிறது. இதன் அடிப்படையில் நாடார்களைப் பத்திரகாளியின் மைந்தர்கள் என்று அழைப்பது உண்டு[சான்று தேவை]. நாடார்களின் தோற்றம் குறித்துப் பலர் ஆராய்ந்து அறிய முயன்றும் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. 19ம் நூற்றாண்டில் நாடார்களைக் குறித்து ஆய்வு நடத்திய கால்டுவெல், நாடார்கள் வட இலங்கையில் இருந்து குடி பெயர்ந்தவர்கள் என்னும் கருத்தை முன்வைத்தார். ஆனால் இந்தக் கருத்தைப் பலர் ஆதரிக்கவில்லை. குறிப்பாக நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பலர் நாடர்கள் முன்னர் உயர் நிலையில் இருந்தவர்கள் என்றும், அவர்களின் தோற்றம் அரச குலத்தவரோடு தொடர்புடையது என்றும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்[சான்று தேவை]. மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனவும் அவர்கள் கூறினர். மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன என்பதும் அவர்களது கருத்தாக இருந்தது.
நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று என்றும், அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவர்கள் கருதினர். பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது.
இச்சமுதாயத்தினரைக் குறிக்கும் சாணார், நாடார் போன்ற சொற்கள் சான்றார், சான்றோர், நாடாள்வார் ஆகிய சொற்களில் இருந்து மருவியவை போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் அதற்குரிய நம்பகமான ஆதாரங்களோ ஆவணங்களோ இல்லை. கால்டுவெல் குறிப்பிட்டது போல் நாடார்கள் தாழ்ந்த நிலையில் இருந்தவர்கள் அல்ல என்றும், பதனீர் இறக்குபவர்கள் மட்டுமன்றி அவர்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும் இருந்தனர்.
இவர்கள் சேர, சோழ மற்றூம்பாண்டிய மூவேந்தர்களின் வழித் தோன்றர்களாக நாடார்கள் கருதப்படுகிறார்கள்.[சான்று தேவை] நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிடைத்த 2 தொல்பொருள் ஆவணங்கள் மூலம் சேர, பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் இவர்கள் மிகச்சிறந்த நிர்வாகிகளாக திகழ்ந்தது தெரியவந்துள்ளது. அரசின் வரவு- செலவை அவர்கள் கவனித்ததற்கான ஆவணச் சான்றுகள் உள்ளன.
அரசியலிலும் ஆன்மீகத்திலும் நாடார் சமுதாய மக்கள் பங்களிக்கின்றனர். நாடார் இனத்தைச் சேர்ந்த காமராஜர் தமிழக முதல்வராகப் பணியாற்றி தமிழக முன்னேற்றத்திற்கு பெரிதும் பாடுபட்டார். ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே ஒருங்கிணைப்பு சங்கங்கள் மூலமாக தொழிற்பேட்டைகளை அமைத்து நாடார்கள் வணிகம் செய்துவந்தனர். இன்றைக்கு பல கிளைகளோடு வங்கியாகச் செயல்பட்டுவருகிற "தமிழ்நாடு மெர்கண்டைல்ஸ் பேங்க்" நாடார்களின் கூட்டு முயற்சியால் உருவான ஒன்று. சங்க அமைப்புகள் மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொழிற் வளர்ச்சி ஆலோசனை நிறுவனங்கள், சிறு தொழிற் வளாகங்கள், தங்குமிடங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் மற்றும் சிறிய பெரிய முதலீட்டில் தொழிற் கடனுதவியோடு கூடிய வங்கிகள் என சமுதாய வளர்ச்சிப் பணிகளை நாடார் இயக்கங்கள் செய்து வருகின்றன. இவர்கள் வெளிநாடுகளான இலங்கை, இலண்டன், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சங்கம் அமைத்திருக்கின்றனர்.
நாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும் பொருளுடைத்தது.[சான்று தேவை] ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் நாடார் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Channar) என்று குறிக்கப்பட்டுள்ளனர்.[சான்று தேவை] சாணார் என்ற வழக்கு இழிவாகக் கருதப்பட்டதால் நாடார் என்ற பட்டத்தையே சாதிப் பட்டமாகவும் சாதிப் பெயராகவும் இச்சாதியினரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத் தொடங்கினர்.[4] நாடார் சாதியில் பின்வரும் ஜந்து உட்பிரிவுகள் உள்ளன:
நாடாள்வான், நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலைமைக்காரர், முக்கந்தர் அல்லது முக்கந்த நாடார், சிறுகுடிச் சாணார் அல்லது நட்டாத்திகள், மேனாட்டார், கள்ளச் சாணார், ஆகிய பெயர்களைக் கொண்ட சேர்வைக்காரர். மூப்பன்,மூப்பர் ( தலைமைக்காரன் என்ற பட்டங்களுக்குரிய நாடார் ) ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து (1910) இச்சமுதாயத்தினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர். ஆயினும், 2001இல் எடுக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74இன் கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர். மேலும், தமிழ் நாடு அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது
நாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்குமிடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத்தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது.பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் சிறப்பாகச் செயல்பட்டு பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் ஆற்றி வரும் கல்விப்பணி அரியது. கிறித்துவ மத சார்புடைய அமைப்புகளுக்கு அடுத்ததாக நாடார் சமூகத்தினர் அதிக அளவில் கல்விக்கூடங்களை உருவாக்கியுள்ளனர். இந்த க் கல்விக்கூடங்களின் வாயிலாக தமிழகத்தில் சிறப்பான கல்விப்பணியாற்றும் நாடார் சமுதாயத்தின் பங்களிப்பு பெரிதும் போற்றக் கூடியது.
இன்றைய கேரளா அன்று திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியாக இருந்தது. அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ' நாடார் போன்ற சில சமூகத்தினருக்கும் உயர்சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட கோயில்களுக்குள் சென்று கடவுளை வணங்கும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த அடக்கு முறையைக் கண்டு மனம் வெறுத்த கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள்.
இதற்கும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாடார் இன மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். உதாரணமாக, 1680இல் திருநெல்வேலி மாவட்ட ஊராகிய வடக்கன்குளத்தில் கிறித்தவ நாடார் இருந்தனர். அவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள். 1685இல் அவர்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டது. 1701இல் அங்கு சுமார் 4000 கிறித்தவர் இருந்தனர்.
திருவிதாங்கூர் பகுதியில் நாடார் மக்கள் நடுவே புராட்டஸ்டாண்டு சபையினர் பணிசெய்தனர். 1780இல் பலர் கிறித்தவர் ஆயினர். ரிங்கல்டவுபே என்னும் பெல்ஜிய நாட்டு போதகர் திருவிதாங்கூர் பகுதியில் அமைந்த மயிலாடி என்னும் ஊரில் நாடார் கிறித்தவப் பிள்ளைகளுக்கென்று முதல் பள்ளிக்கூடத்தை 1806இல் நிறுவினார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1819இல் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தைக் கிறித்தவ போதகர்கள் நாகர்கோவிலில் தொடங்கினார்கள். நாடார் சமுதாய மக்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடினர். ஒரு சமூகப் புரட்சியே வெடித்தது.