முனைவர் சைலேந்திர பாபு (பிறப்பு: சூன் 5, 1962) ஓர் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆவார். இவர் 1987 ல் தமிழ்நாடு பணிநிலைப் பிரிவின் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆகப் பணியைத் தொடந்தார். அவர் 2012 வரை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராகப் (ADGP ) பணியாற்றினார் . சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியலில் முனைவர் பட்டம் மட்டுமல்லாது பெருவேட்கையுடைய வாசகர்
கல்வி
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்து, மதுரையில் அமைந்துள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில், விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் அவருடைய "Missing Children" ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் மனித வள வணிக நிர்வாக படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார்
விளையாட்டு
உடற்பயிற்சியைத் தீவிரமாகக் கடைபிடித்து உடலைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் 'உடல்நலத் தகுதி' எனும் தமிழ் நூலை எழுதி உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்போருக்கு விருந்தாக இந்த நூலைத் தந்துள்ளார். வீர தீர விளையாட்டுச் செயல்கலான நீச்சல், தடகளம், துப்பாகிச்சுடுதல், சைக்கிளிங் போன்றவற்றில் அதி தீவிர பங்களிப்பால் நீச்சலுக்காகத் தேசிய போலீஸ் அகாடமி மூலம் "RD சிங்" கோப்பையை பெற்றுள்ளார். திசம்பர் 2004 இல் பாங்காக்கில் நடைபெற்ற Asian Masters Athletic Championshipsலும், சென்னை மராத்தான், மற்றும் கோவை மராத்தான் போட்டியிலும் தொடர்ந்துள்ளது.[சான்று தேவை]
பெப்ரவரி 2008 ஆம் ஆண்டில் இந்தியன் கடற்கரையோரப் பாதுகாப்பு படை மற்றும் கடலோரப் பாதுகாப்பு உறுப்பினர்களுடன் இணைந்து கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு 890 கி. மீ சைக்கிள் பேரணியை ஏற்பாடு செய்து பேரணியிலும் கலந்துக் கொண்டார். 10 நாட்களாக நடந்த அந்த பேரணியில் கடலோரக் காவலர்களின் செயல்பாடு மற்றும் கடலோர மக்களின் மத்தியில் காவற்படையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயலாற்றினார். துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் கொண்ட சைலேந்திர பாபு அவர்கள் காவல்துறை மற்றும் பொதுத்துறை சார்ந்த துப்பாக்கிச்சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார்
இளைஞர்களைப் பற்றிய கருத்துகள்
இளைஞர்கள், சமுதாயமும் குடும்பமும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். நாம் என்ன செய்கிறோம், எதற்காக செய்கிறோம் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். தன் பண்புகளை இளைஞர்கள் ஆராய்ந்து, அவற்றை சரி செய்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இளைஞனும் ஏதாவது ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்புக் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள் மன்னிக்கப்படக் கூடாதவர்கள்.
இந்தியக் காவல் பணி
இந்தியக் காவல் பணி அதிகாரி ஆக (IPS) பணியில் சேர்ந்த சைலேந்திர பாபு அவர்கள் ஐதராபாத் தேசிய காவல் அகாடமி மூலம் பயிற்சிப் பெற்றார். காவல்துறை உதவி கண்காணிப்பாளராக (ADSP) கோபிச்செட்டிபாளையம், சேலம் மற்றும் திண்டுக்கல்லில் பணியாற்றி, காவல்துறை கண்காணிப்பாளராக செங்கல்பட்டு, சிவகங்கை, கூடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பணியாற்றினார், பின்னர் காவல்துறை துணை ஆணையாளர் ஆக அடையாரிலும் பின் காவல்துறை துணைத் தலைவர் (DIG) ஆக விழுப்புரம் சரகத்திலும் இணை ஆணையாளராக சென்னையிலும் பணியாற்றினார், கரூர் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாகப் பணியாற்றுவதற்கு முன்பு காவல்துறை துணைத் தலைவர் ஆக திருச்சியிலும் பின் சென்னை வடக்கு மண்டலத்தின் காவல்துறை துணைத் தலைவர் ஆக பணியாற்றுவதற்கு முன் முன்பு காவல்துறை தலைவராக (IG) கோவையிலும் பணியாற்றினார்.
ஏப்ரல் 2014 ல் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனராக (Assistant Director of General Police) பதவி உயர்வுப் பெற்ற சையிலேந்திர பாபு தற்போது தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படைக்குழுவின் தலைமை இயக்குனராக பணியில் உள்ளார்