• Our Gallery
  • பி. எச். பாண்டியன்

    பி. எச். பாண்டியன் (P. H. Pandian) ஒரு தமிழக அரசியல்வாதியாவார். இவர் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் சேரன்மகாதேவியில் இருந்து 1977, 1980, 1984 ஆண்டுகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் சார்பாக தமிழ்நாட்டுச் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 1980 முதல் 1985 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் துணைத்தலைவராகப் பதவி வகித்தார். பிப்ரவரி 27, 1985 முதல் பிப்ரவரி 5, 1989 வரை தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். 1989இல் அதிமுகவின் ஜானகி ராமச்சந்திரன் பிரிவிலிருந்து தமிழ்நாட்டுச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவராவார். 1999இல் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராகவும் இருந்தார். இவரது மகன் மனோஜ் பாண்டியனும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவராவார்.


    குமரி அனந்தன்

    தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி, பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர்,.முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி, என்று பன்முகத் திறன் கொண்டவர்

    பிறப்பும் கல்வியும்

    குமரி அனந்தன் கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில் இந்து நாடார் இனத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருட்டினப்பெருமாள் - தங்கம்மை தம்பதிக்கு தலை மகனாக 1933 மார்ச்சு 19 ஆம் தேதியன்று பிறந்தார். இவருடைய இயற் பெயர் அனந்தகிருட்டிணன். குமரிமங்கலம் அனந்தகிருட்டிணன் பின்னாளில் குமரி அனந்தன்ஆனார். தொழில் அதிபர் எச்.வசந்தகுமார், இவருடைய தம்பி ஆவார். தமிழில் எம்.ஏ மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றார். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.

    குடும்பம்

    இவரது மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி. இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

    பாராளுமன்ற உறுப்பினர்

    இவர் 1977 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், 1977 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு தேர்வு பெற்றார். இதற்கு முன்பு பெருந்தலைவர் காமராசர் போட்டியிட்ட தொகுதி இதுவாகும்.
    • இதற்குப் பின்பு 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
    • அடுத்து இரண்டு முறை நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்:
    • 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், 1996 தேர்தலில் இதே நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி
    • 1998 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், 1998 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி

    சட்டமன்ற உறுப்பினர்

    இவர் ஐந்து முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினாராக தேர்ந்தேடுக்கப்பட்டவராவார். மொத்தம் 19 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்[5]. திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி) 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்[6]. இது போல 1984 ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்[7]. 1989 மற்றும் 1991. சாத்தான்குளம்சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தெடுக்கப்பட்டார்[8]. இவர் ஒரு முறை எம்.எல்.ஏ.,தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்[9]. 1980 களில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கினார். பின்னர் அதனை இந்திய தேசிய காங்கிரசுடன் இணைத்தார். பின்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தொண்டர் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்[10]. தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை அலட்சியம் செய்ததாலேயே இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறினார். தற்போது மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

    நதிகள் இணைப்பு

    நதிகள் இணைப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் இவர் வலியுறுத்திக் கூறும் கருத்துக்கள்[13] இவை:
    • இந்தியாவில் கிடைக்கும் மொத்த நீரில், 31 சதவீதம் தான் பயன்படுகிறது. மீதி 69 சதவீத தண்ணீர், கடலுக்குப் போகிறது.
    • நதிகளை இணைத்தால், நீர் வழிச்சாலை கிடைக்கும்.
    • கப்பல் பயணம் எளிதாகும்.
    • நதி நீர் இணைப்பால் 1 லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகா வாட் அளவிற்கு, மின்உற்பத்தி செய்ய முடியும்.