• Our Gallery
  • நாடார்கள்

    நாடார் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். மேலும், மதுரை, தேனி, சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் பரவலாக உள்ளனர்.[சான்று தேவை] நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும் அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி,லிங்காயத் சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவர்கள் ஆவர். திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.

    நாடார்கள்

    நாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும் பொருளுடைத்தது.[சான்று தேவை] ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் நாடார் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Channar) என்று குறிக்கப்பட்டுள்ளனர்.[சான்று தேவை] சாணார் என்ற வழக்கு இழிவாகக் கருதப்பட்டதால் நாடார் என்ற பட்டத்தையே சாதிப் பட்டமாகவும் சாதிப் பெயராகவும் இச்சாதியினரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத் தொடங்கினர்.[4] நாடார் சாதியில் பின்வரும் ஜந்து உட்பிரிவுகள் உள்ளன:

    நாடாள்வான், நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலைமைக்காரர், முக்கந்தர் அல்லது முக்கந்த நாடார், சிறுகுடிச் சாணார் அல்லது நட்டாத்திகள், மேனாட்டார், கள்ளச் சாணார், ஆகிய பெயர்களைக் கொண்ட சேர்வைக்காரர். மூப்பன்,மூப்பர் ( தலைமைக்காரன் என்ற பட்டங்களுக்குரிய நாடார் ) ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து (1910) இச்சமுதாயத்தினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர். ஆயினும், 2001இல் எடுக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74இன் கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர். மேலும், தமிழ் நாடு அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது

    நாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்குமிடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத்தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது.பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் சிறப்பாகச் செயல்பட்டு பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தில் உள்ளனர்.

    தமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் ஆற்றி வரும் கல்விப்பணி அரியது. கிறித்துவ மத சார்புடைய அமைப்புகளுக்கு அடுத்ததாக நாடார் சமூகத்தினர் அதிக அளவில் கல்விக்கூடங்களை உருவாக்கியுள்ளனர். இந்த க் கல்விக்கூடங்களின் வாயிலாக தமிழகத்தில் சிறப்பான கல்விப்பணியாற்றும் நாடார் சமுதாயத்தின் பங்களிப்பு பெரிதும் போற்றக் கூடியது.

    பிரபலமான நாடார்கள்